காப்பகத்தில் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
காப்பகத்தில் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
திருப்பூர்
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின்படியும், நேற்று உலக மனநல தினத்தை முன்னிட்டு திருப்பூர் பெரியார் நகரில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் என்ற காப்பகத்தில் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சட்ட உதவி மைய பட்டியல் வக்கீல்கள் ராஜசேகரன், கணபதி, வெங்கடேஷ், அமர்நாத், ஸ்ரீராதா, சிவசங்கரி, தமயந்தி ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரமத்தில் உள்ள முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருடன் கலந்துரையாடினார்கள். திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
---