சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-06-30 07:21 GMT

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

செந்தில் பாலாஜியை நீக்கும் விவகாரத்தில் கவர்னர் சமயோஜித புத்தியோடு செயல்பட்டுள்ளார். அமலாக்கத்துறை கைது செய்து, கைதி எண் கொடுக்கப்பட்டவர் எப்படி அமைச்சராக தொடர முடியும். அமைச்சராக இருக்கும்போது செந்தில்பாலாஜி விசாரணைக்கு எப்படி ஒத்துழைப்பார்.

அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதற்காக தான் ஆளுநரை சந்தித்து அதிமுக சார்பில் மனு அளித்தோம். அமைச்சராக இருந்தால் விசாரணை பாதிக்கும்: பல உண்மைகள் வெளிவராமல் போக நேரிடும்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளது. ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும் என்பது தான் கேள்வி?. மாமன்னன் சுத்த ப்ளாப் படம். திமுகவினர் தான் அந்த திரைப்படத்தை சென்று பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்