சட்ட விழிப்புணர்வு முகாம்

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.;

Update: 2022-10-13 18:45 GMT

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நாகை முதன்மை குற்றவியல் நீதிபதி கிருத்திகா தலைமை தாங்கினார். மாவட்ட சமூகநல அலுவலர் தமீமுநிஷா, பாதுகாப்பு அலுவலர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண் கல்வியின் அவசியம், பெண்களுக்கான சட்டங்கள், நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு குறித்து முகாமில் விளக்கப்பட்டது.. தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்