சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனை கூட்டம்

சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது

Update: 2023-09-15 18:45 GMT

ராமநாதபுரம்

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகள் நலக்குழு, இளைஞர் நீதிக்குழுமம் ஆகியோருக்கு ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட நீதிபதி குமரகுரு தலைமை தாங்கினார். மகிளா கோர்ட்டு நீதிபதி கோபிநாத் முன்னிலை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி கதிரவன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட நீதிபதி குமரகுரு குழந்தைகளுக்கு ஏற்படும் குற்ற வழக்குகள், குழந்தைகளுக்குரிய உளவியல் ரீதியான பிரச்சினைகள், மற்றும் பாலியல் தொல்லைகள், பாதுகாப்பு நலன்கள், அதற்கான வழிமுறைகள், குழந்தைகளை பிரச்சினைகளின் போது கையாள வேண்டிய வழிமுறைகள், அவர்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விரிவாக பேசினார்.

நிகழ்ச்சியில், இளைஞர் நீதிக்குழும தலைவர் நீதிபதி நிலவேஸ்வரன், குழந்தைகள் நலக்குழு தலைவர் காயத்ரி, உறுப்பினர்கள் தேன்மொழி, கதிரவன், மருத்துவ கல்லூரி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்