அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இளைஞர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இளைஞர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2022-07-05 09:17 GMT

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை இடதுசாரி இளைஞர் மாணவர் அமைப்பினர் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரியும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை கண்டித்தும், ராணுவ வீரர்களை 4 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யும் முடிவை கைவிடக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்