சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

Update: 2023-09-13 10:12 GMT

தாராபுரம்

தாராபுரத்தில் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் போக்சோ மற்றும் சைபர் கிரைம் சட்ட விழிப்புணர்வு முகாம் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட சட்ட பணிக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம். தர்ம பிரபு தலைமை தாங்கி கூறும்போது " மாணவர்கள் படிக்கும் வயதில் படிப்பை சிந்தனையாக கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழிவகை செய்ய வேண்டும். மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். மேலும் நாம் பள்ளிக்கு வருவதை யாராவது தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்றார்.

தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ். பாபு கூறும்போது " மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நல்வழி காட்டுவது அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார். தாராபுரம் மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாதாம் பிரியா கூறும்போது " பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களை மயக்கும் வகையில் யாராவது பேசினாலும் தேவையில்லாமல் தொட்டு பேசினாலும் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது. அத்துடன் திடீரென அறிமுகம் ஆகும் இளைஞர்களிடம் பரிசு பொருள்களோ பணமோ, அன்பளிப்பு வாங்க கூடாது. இது முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். முகாமில் வழக்கறிஞர் சங்க தலைவர் கலைச்செல்வன், செயலாளர் எம்.ஆர் ராஜேந்திரன், வழக்கறிஞர் சித்ரா பாண்ட்ஸ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்