இலைக்கருகல் நோயால்3 ஆயிரம் வாழைகள் பாதிப்பு

விக்கிரமசிங்கபுரத்தில் இலைக்கருகல் நோயால் 3 ஆயிரம் வாழைகள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Update: 2023-01-04 19:09 GMT

விக்கிரமசிங்கபுரத்தில் இலைக்கருகல் நோயால் 3 ஆயிரம் வாழைகள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இலைக்கருகல் நோய்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அனவன்குடியிருப்பு பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல், கரும்பு, வாழை போன்றவற்றை பயிரிட்டுள்ளனர்.

தற்போது வாழை மரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் வாழை மரங்களில் இலைக்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக பலமுறை பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும் வாழை மரங்களில் நோய் பாதிப்பு குறையவில்லை. இதனால் குலை தள்ளும் நிலையில் உள்ள சுமார் 3 ஆயிரம் வாழை மரங்களின் தண்டு பகுதி அழுகி, இலைகள் கருக தொடங்கியுள்ளன.

இழப்பீடு வழங்க...

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''ஒவ்வொரு வாழை மரத்துக்கும் ரூ.80 வரையிலும் செலவு செய்து பயிரிட்டோம். நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும்தான் விவசாயம் செய்து வருகிறோம். வனவிலங்குகளால் விளைநிலங்கள் சேதமடைந்த நிலையில், தற்போது வாழை மரங்களை இலைக்கருகல் நோய் தாக்கியதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

எனவே நோய் பாதிப்புக்குள்ளான வாழை மரங்களை அதிகாரிகள் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்