மேல்பென்னாத்தூர் நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல்

மேல்பென்னாத்தூர் நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Update: 2023-02-01 17:20 GMT

மேல்பென்னாத்தூர் நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டகாணொலி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்/

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வேலூர் வந்தார். காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்புமேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமீகாத்தின் பல்வேறு பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகளை காணொலி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதன்படி செங்கம் அருகே உள்ள மேல்பென்னாத்தூர் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலெக்டர் பா.முருகேஷ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயராணிகுமார், செங்கம் தாசில்தார் முனுசாமி உள்பட அரசு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். மேலும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சமைத்து வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்