விழுப்புரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், விழுப்புரம் மாவட்ட அனைத்து வக்கீல் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், காளிதாஸ் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.