வக்கீல்கள் 2-வது நாளாக போராட்டம்

வக்கீல்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

Update: 2023-01-27 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.37½ கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது அதில் 9 கோர்ட்டுகள் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. ஆனால், கோர்ட்டு கட்டிடங்கள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றும், அடிப்படை வசதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறி பெரும்பாலான வக்கீல்கள் நேற்று 2-வது நாளாக கோர்ட்டுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் வக்கீல்கள் சங்கத் தலைவர் சந்திரபோஸ் நிருபர்களிடம் கூறும்போது,

கோர்ட்டுக்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட அணுகு சாலைக்கான பணிகளை இதுவரை தொடங்கவில்லை. நகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதேபோல் வக்கீல்கள் சங்க கட்டிடம் ஏற்கனவே திட்டமிட்டபடி இல்லாமல் மாற்றப்பட்டு உள்ளது. எனவே அணுகு சாலை நிலை குறித்து எங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும். மேலும் சென்னையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து எங்களது கோரிக்கையை தெரிவிக்க அனுமதி கேட்டுள்ளோம். அவரை சந்திக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்