வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருத்தாசலம்,
திட்டக்குடி நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரியும் சுகந்தியை தாக்கியவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்தும், அவரை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும், திருப்பூர் வக்கீல் ஜமீலா பானு மற்றும் அவரது மகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விருத்தாசலம் நீதிமன்ற அனைத்து வக்கீல்கள் கூட்டமைப்பினர் நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வக்கீல் அம்பேத்கர் தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க தலைவர்கள் சதீஷ்குமார், தில்லைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செயலாளர்கள் மாயா.மணிகண்டன், இளையராஜா, குணசேகர், வக்கீல்கள் சங்கரய்யா, அருள்குமார், சிவாஜிசிங், விஸ்வநாதன், குமரகுரு, அசோக்குமார், தங்க.தனவேல், சரவணன், காசி விஸ்வநாதன், குபேரமணி, ஜெயபிரகாஷ், ராமு, கணபதி, ஜெயஸ்ரீ மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.