பழனியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பழனியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி வக்கீல்கள் சங்கம் சார்பில் பழனி கோர்ட்டு முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பால்சாமி, பொருளாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வக்கீல் சுரேந்தர் மீது பொய் வழக்கு போட்டதாக ஆயக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தப்பட்டது. இதில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முன்னதாக வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.