விருத்தாசலம்
விருத்தாசலத்தில் நேற்று வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வக்கீல் மாய.மணிகண்டன் தலைமை தாங்கினார். வக்கீல்கள் அம்பேத்கர், சந்திரசேகர், சதீஷ்குமார், விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்களுடன் மோதல் போக்கை மேற்கொள்ளும் குமரி மாவட்டம் இரணியல் போலீசாரை கண்டித்தும், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வக்கீல்கள் காசி விஸ்வநாதன், புஷ்பதேவன், இளையராஜா, அறிவழகன், காமராஜ், மோகன்ராஜ், குணசேகரன், ஜெயபிரகாஷ், ஜெயஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.