வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-25 19:40 GMT

பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசனை சேர்ந்த வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்து காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அசோசியேசன் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் வக்கீல்கள் 3 இந்திய சட்டங்களின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றும் மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதேபோல் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் பார் அசோசியேசனை சேர்ந்த வக்கீல்கள் 5-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்