வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
வேப்பந்தட்டையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் பார் அசோசியேஷன் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை தாங்கினார். வக்கீல்கள் வாசுதேவன், அண்ணாதுரை, வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 3 சட்ட திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வக்கீல்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.