வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-23 18:45 GMT

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களின் சரத்துக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முழுமையாக மாற்றி இந்தி மொழியில் பாரதிய நியாய ஷன்ஹிதா, பாரதிய நஹ்ரிக் சுரஷா, பாரதிய சஷய அதிநயம் சட்டம் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இருந்த, முப்பெரும் சட்டங்களின் பெயர்களை, மக்களுக்கு புரியாத உச்சரிக்க இயலாத வகையில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்தும் 3 சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் பழைய பெயரில் சட்டங்களை அமல்படுத்தக்கோரியும் நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தின் முன்பு வக்கீல் சங்க தலைவர் சேக் இப்ராகிம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். இதில், பொருளாளர் பாபு, துணை தலைவர் மாதவன், இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மூத்த வக்கீல்கள் குணசேகரன், அற்புதராஜ், வடிவேல், முருகபூபதி, வில்வகுமார், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்