பெரம்பலூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம்

பெரம்பலூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-22 18:12 GMT

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட நீதிபதிகள் குடியிருப்புகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாக பொறுப்பு (போர்ட்போலியோ) நீதிபதியுமான மாலா நேற்று மாலை திறந்து வைத்தார். முன்னதாக அதன் திறப்பு விழா அழைப்பிதழை பெரம்பலூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத 3-வது வக்கீல்கள் சங்கத்தினருக்கு வழங்கியதை கண்டித்தும், இது வக்கீல்கள் சங்கங்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தும் என்றும் பெரம்பலூர் பார் அசோசியேஷன் (குற்றவியல்) தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில், அச்சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செல்லும் சாலையின் அருகே கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை தொடங்கிய உண்ணாவிரதம் மாலை வரை நீடித்தது. இந்த போராட்டத்தால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் கூடி அடுத்த கட்ட முடிவு எடுப்பார்கள் என்று அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்