வக்கீல்கள் உண்ணாவிரதம்
ஆண்டிப்பட்டி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆண்டிப்பட்டி கோர்ட்டு அருகில் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆண்டிப்பட்டி கோர்ட்டு அருகில் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆண்டிப்பட்டி கோர்ட்டு வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள், வக்கீல்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கோர்ட்டுக்கு சொந்த கட்டிடம் கட்டக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு வக்கீல்கள் சங்க தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். இதில் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து வக்கீல்கள் சங்கத்தினர் கூறுகையில், ஆண்டிப்பட்டியில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கடந்த 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கோர்ட்டுக்கு சொந்த கட்டிடம் இல்லாதால் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆண்டிப்பட்டி கோர்ட்டுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டிடம் கட்ட பல்வேறு இடங்களை தேர்வு செய்யப்பட்டது. ஆனால் சில காரணங்களால் கோர்ட்டுக்கு கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட இல்லை. எனவே ஆண்டிப்பட்டி கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் என்றனர்.