வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

Update: 2023-09-07 20:22 GMT

கும்பகோணம்:

கும்பகோணம் தாலுகா திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). சம்பவத்தன்று இவருடன் கும்பகோணத்தை சேர்ந்த வக்கீல்கள் அகிலன், பாரதிராஜா ஆகியோர் வழக்கு சம்பந்தமாக திருவாரூர் கோர்ட்டுக்கு சென்று விட்டு காரில் கும்பகோணம் நோக்கி வந்துள்ளனர். அப்போது குடவாசல் அருகே நாகளூர் கிராமம் பகுதியில் சென்ற போது காரை மறித்து 6 பேர் கும்பல் செந்தில்குமாரை வெட்டி கொலை செய்தனர். அப்போது தடுக்க வந்த வக்கீல் அகிலனையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதில் படுகாயம் அடைந்த வக்கீல் அகிலன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். வக்கீலை அரிவாளால் வெட்டியதை கண்டித்து கும்பகோணம் வக்கீல்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் செந்தில், துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வக்கீல் அகிலனை அரிவாளால் வெட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கோா்ட்டுகளிலும் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று கும்பகோணம் வக்கீல் சங்கத் தலைவர் விவேகானந்தன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்