அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-07-24 09:25 GMT

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் உருவப்படத்தை நீக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட் அறிவுறுத்தலில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை ஐகோர்டடின் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி, கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்