வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

ஆம்பூரில் வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-21 18:10 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு, ஆம்பூர் வழக்கறிஞர் சந்திரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அப்போது டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தை கோர்ட்டில் இருந்து அகற்றக்கோரி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப்பெற கோரி 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்