துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி-சகோதரி கைது
துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி, சகோதரியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை கோ.புதூரை சேர்ந்த வக்கீல் சகோதரிகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா. இவர்கள் இருவரும் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் மத்திய அரசு ரூ.10.72 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ள நிலையில் அதனை வசூல் செய்து வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற பிரசார இயக்கத்தின் சார்பில் துண்டு பிரசுரம் வினியோகித்தனர். உரிய அனுமதி பெறாத நிலையில் துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் சகோதரிகளை விருதுநகர் மேற்கு போலீசார் கைது செய்தனர்.