வழக்கறிஞர் கொலை வழக்கு; போலீசாரை தாக்கிய முக்கிய குற்றவாளி - சுட்டுப் பிடித்த போலீசார்
வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலிசார் சுட்டுப் பிடித்தனர்.;
தூத்துக்குடி,
கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முத்துகுமார் என்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயப்பிரகாஷ், தட்டப்பாறை காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று ஜெயப்பிரகாஷை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர் ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து ஜெயப்பிரகாஷை போலீசார் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.
காலில் காயமடைந்த ஜெயப்பிரகாஷை போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் சுடலை மணி ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.