விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலி

திருப்புவனம் அருகே நடந்த விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2022-12-23 18:46 GMT

திருப்புவனம்,

சிவகங்கை மஜீத்ரோடு பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்யமுகுந்தன் (வயது 18). சட்டக்கல்லூரி மாணவர். இவர் அரசனூர் விலக்கில் இருந்து நேற்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி ெகாண்டிருந்தார். நல்லாகுளம் வளைவு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்