சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி

சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி;

Update: 2023-10-03 10:13 GMT

திருப்பூர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் சட்டப்பல்கலைக்கழங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த பயிற்சியை பெற 18 வயது முதல் 25 வயது நிரம்பியவர்கள், 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும், தேர்வு நடைபெறும் முறை நேரடியாகவும் நடக்கும்.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சட்டப்படிப்பு படிப்பதற்கு மற்ற நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். பொது நுழைவுத்தேர்வுக்கான சட்டப்படி நுழைவு தேர்வுக்கான பயிற்சியை வெற்றியுடன் முடிக்கும் மாணவர்களுக்கு நேர்காணல், குழுவிவாதம், எழுத்துத்தேர்வு ஆகியவற்றுக்கும் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற www.tahdco.comஎனற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

------

Tags:    

மேலும் செய்திகள்