சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம்

சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நடைெபற்றது.

Update: 2022-12-02 19:01 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துகளில் தலையில் அடிபடுவதால் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தலைக்கவசத்தின் பயன் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேற்படி விழிப்புணர்வு அரசு அலுவலகங்களில் இருந்து அரசு அலுவலர்கள் மூலமாக முதல் கட்டமாக ஏற்படுத்த வேண்டும். அதன் படி வருகிற 5-ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனத்தில் வருகின்ற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். இரு சக்கர வாகனத்தில் தலைக்கவச விழிப்புணர்வினை படிப்படியாக பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்க போலீசார் மூலமாக அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்