சேடப்பட்டி அருகே சலவை தொழிலாளி மதுபாட்டிலால் குத்திக்கொலை- முதியவர் கைது

சேடப்பட்டி அருகே சலவை தொழிலாளி மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-25 21:11 GMT

உசிலம்பட்டி

சேடப்பட்டி அருகே சலவை தொழிலாளி மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முதியவர் ைகது செய்யப்பட்டார்.

சலவை தொழிலாளி குத்திக்கொலை

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள கே.ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆளி (வயது 70).சலவை தொழிலாளி. சம்பவத்தன்று ஆளியும் சின்னகட்டளையை சேர்ந்த முத்தையா (60). ஆகிய 2 பேரும் சின்னகட்டளையில் உள்ள முனியாண்டி கோவில் அருகில் மது அருந்தி கொண்டிருந்தனர்.அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த முத்தையா மதுபாட்டிலை உடைத்து ஆளியின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் ஆளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

முதியவர் கைது

இது குறித்து தகவல் அறிந்த சேடப்பட்டி போலீசார் ஆளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முத்தையாவை சேடப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்