மொடச்சூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.82½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

மொடச்சூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.82½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

Update: 2023-07-03 23:46 GMT

கோபி

கோபி அருகே மொடச்சூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு நாதிபாளையம். கொளப்பலூர், குள்ளம்பாளையம், கரட்டடிபாளையம், காமராஜ் நகர், கலிங்கியம், அயலூர், நாகதேவம்பாளையம், மொடச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், கீரைகள், பழ வகைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

கடந்த ஜூன் மாதம் விவசாயிகள் 2 லட்சத்து 70 ஆயிரத்து 53 கிலோ காய்கறிகளை கொண்டு வந்திருந்தனர். இவைகள் 82 லட்சத்து 62 ஆயிரத்து 599 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த தகவலை கோபி உழவர் சந்தை நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்