கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.82 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.82 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.
கோபி
கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.82 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.
உழவர் சந்தை
கோபி மொடச்சூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியம்பாளையம், வெள்ளாங்கோவில், சுண்டபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
ரூ.82 லட்சத்து....
கடந்த ஜூலை மாதத்தில் 895 விவசாயிகள் 3 லட்சத்து 13 ஆயிரத்து 855 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள். 82 லட்சத்து 2,768 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானது.
மேற்கண்ட தகவலை கோபி உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.