லாரி மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
லாரி மோதி கல்லூரி மாணவர் படுகாயமடைந்ததையடுத்து டிரைவர் கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பொன்நகரை சேர்ந்த கருணாநிதியின் மகன் சிவபாரத் (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இடையார் பிரிவு சாலை அருகே பின்னால் வானத்திரியான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மோகன்ராஜ் (37) ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக சிவபாரத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.