லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

தூத்துக்குடியில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.;

Update: 2023-05-31 18:45 GMT

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் ஷெல்டன் (வயது 45). தனியார் நிறுவனத்தில் சூப்பிரவைசராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் துறைமுகம் நுழைவு வாயில் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ஷெல்டனை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்