கழுகுமலை:
கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் கோமதி சங்கர் (வயது 16). பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காளவாசல் பஸ் நிறுத்தத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். இதுபற்றி கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.