கடந்த 2 வருடங்களில் அதிக அளவில் சேர்ந்த மாணவர்கள் - அரசு பள்ளிகளில் புதிய உச்சம்
அரசு பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது
சென்னை,
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 72 லட்சமாக உயர்ந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், அதன் காரணமாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 72 லட்சமாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கையை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.