மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
அரியலூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத் திற்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். தி.மு.க. செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா, தலைமைக்கழக பேச்சாளர் இளையராஜா ஆகியோர் பேசினார்கள். முன்னதாக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல் வரவேற்றார். முடிவில் மாணவர் அணி அமைப்பாளர் சுர்ஜித் நன்றி கூறினார்.