விழுப்புரம் அருகே கல்குவாரியில் மண் சரிவு - 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே கல்குவாரியில் மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.;

Update:2024-02-08 12:44 IST

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டிய போது மண் சரிவு ஏற்பட்டது. அந்த மண் சரிவில் 2 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் 2 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இறுதியில் 2 பேரும் உயிரிழந்து சடலமாகவே மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் இறையனூர் சேர்ந்த அய்யனார் (26) மற்றும் சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (30) என்பது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே குவாரியில் பணிபுரிபவர்களுக்கு போதிய பாதுகாப்பு உங்கரணங்கள் வழங்குவதில்லை என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்