வருவாய்- பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நிலஅளவை பயிற்சி

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வருவாய்- பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நிலஅளவை பயிற்சி நடந்தது.

Update: 2023-05-22 18:45 GMT


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வருவாய்- பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நிலஅளவை பயிற்சி நடந்தது.

மக்களுக்கு சேவை செய்ய...

நிலஅளவர் மற்றும் வரைவாளர்களுக்கு வழங்கப்படும் நில அளவை பயிற்சிக்கான நிகழ்ச்சி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசுகையில், அரசாங்க பணி கனவு, இப்பயிற்சி வகுப்பிற்கு வந்துள்ள அனைவருக்கும் நிறைவேறியுள்ளது. அந்த பணியினை நீங்கள் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். நாம் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம் என்பதை மனதில் வைத்து ஓய்வு பெறும் வரை செயல்பட வேண்டும்.

ஒருசில துறைகளுக்கு மட்டுமே

இந்த பயிற்சி உங்களுக்கு 90 நாட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த பயிற்சியானது அனைத்து துறைகளுக்கும் கிடையாது. ஒரு சில துறைகளுக்கு மட்டுமே இது போன்ற வாய்ப்பு கிடைக்கும். எனவே இந்த பயிற்சி வாய்ப்பினை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு உங்கள் பணிகாலத்தினை செம்மையாக்கி கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் துணைவேந்தர் கிருஷ்ணன், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, உதவி இயக்குனர் (நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை) தேவராஜன், மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் சுதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்