நில அளவைத் துறையின் புதிய மென்பொருள் சேவை: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளை தலைமைச் செயலகத்தில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-18 09:38 GMT

சென்னை,

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளை தலைமைச் செயலகத்தில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், இ.ஆ..ப., நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப., தேசிய தகவலியல் மைய துணை தலைமை இயக்குநர் எஸ். கீதாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்