ரூ.65 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

ரூ.65 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

Update: 2022-10-30 19:57 GMT

கபிஸ்தலம் அருகே 2 கோவில்களுக்கு சொந்தமான ரூ.65 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீ்்ட்டனா்.

ஆக்கிரமிப்பு

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் ராஜகோபாலசாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் 44 சென்ட் நஞ்சை நிலமும், அலவந்திபுரம் கிராமத்தில் சந்திரசேகரசாமி கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் 27 சென்ட் நிலமும் பல ஆண்டுகளாக சில நபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

ரூ.65 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, தாசில்தார் சங்கர், நில அளவையர் ரங்கராஜன், பாபநாசம் சரக ஆய்வாளர் லட்சுமி, கோவில் செயல் அலுவலர் ஹாசினி, கோவில் எழுத்தர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட 2 கோவில்களுக்கு சொந்தமான ரூ.65 லட்சம் மதிப்பிலான நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தை பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்