நிலப்பிரச்சினை; ஒருவர் கைது
ரிஷிவந்தியம் அருகே நிலப்பிரச்சினை காரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் மகன் ராமநாதன் (வயது 46). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பிச்சன் மகன் சக்திவேல் என்பவருக்கும், வீட்டுமனை பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ராமநாதன் அவரது வீட்டுமனையில் மின்இணைப்பு பெற சர்வீஸ் பெட்டியை வைத்துள்ளார். இதை பார்த்த பிச்சன் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல், மூர்த்தி ஆகியோர் சர்வீஸ் பெட்டியை சேதப்படுத்தி, இந்த இடம் தங்களுக்கு சொந்தம் என்றும், இடத்தை உரிமை கொண்டாடினால் கொலை செய்து விடுவோம் என்று ராமநாதனை மிரட்டியதாக தொிகிறது. இதுகுறித்து ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் பிச்சன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர்.