போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி: மேலும் 3 பேர் கைது

எட்டயபுரம் அருகே போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி செய்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-23 18:45 GMT

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர் மயில்வாகனன். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்திகிணறு, போடுபட்டி, லக்கம்மாள்தேவி, புங்கவார்நத்தம், விகாம்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் நிலம் வாங்கி கொடுத்தாராம். இதில் சில விவசாயிகளின் நிலத்தையும் போலி ஆவணம் தயாரித்து தனியார் நிறுவனத்துக்கு கொடுத்து மயில்வாகனன் மற்றும் அவரது கூட்டாளிகள் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மயில்வாகனனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சாத்தூர் தாலுகா என்.குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (45), கோவில்பட்டி தாமஸ் நகரைச் சேர்ந்த பவுல்ராஜ் (53), சாத்தூர் பெருமாள் கோவில் தெற்கு மாடவீதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) ஆகிய 3 பேரையும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்