நிலத்தகராறு; 7 பேர் மீது வழக்கு
தியாகதுருகம் அருகே நிலத்தகராறில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கண்டாச்சிமங்கலம்:
தியாகதுருகம் அருகே உள்ள வி.புதூர் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சிங்காரவேல் மனைவி சரசு(வயது 40). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சரவணன் மனைவி அமுதா(40) என்பவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி தாக்கினர். இதில் சிங்காரவேல் மகன்கள் அஜித்குமார், ஆகாஷ், கட்டையன் மகன் சரவணன், இவரது மனைவி அமுதா ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தியாகதுருகம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் சரவணன், அருள், அமுதா, சரசு, அஜித்குமார், ஆகாஷ், செங்கான் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.