நில தகராறு; 3 பேர் கைது

நில தகராறில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-11-20 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே கட்டபெட்டு பாரதி நகரை சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் சதீஷ் குமார் (வயது 23). இவர் நில பிரச்சினை காரணமாக தந்தை தேவராஜை (55) சித்தப்பா சின்னதுரை (54) தாக்கி காயப்படுத்தியதாகவும், தந்தை ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், எனவே, சின்னதுரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை மேற்கொண்டு சின்னதுரையை கைது செய்தார். இதேபோல் சின்னதுரையின் உறவினர் புவனா (23) என்பவர், தேவராஜின் மகன்களான சதீஷ் குமார், ரவிகுமார் ஆகியோர் தங்களை தாக்கி, வீட்டை சேதப்படுத்தி, மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தனர். அதன் பேரில் சதீஷ் குமார், ரவி குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்