உசிலம்பட்டி பகுதியில் கன மழையால் உடைந்த தரைப்பாலம்; கிராம மக்கள் கடும் அவதி

உசிலம்பட்டி பகுதியில் கன மழையால் உடைந்த தரைப்பாலத்தால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2022-11-03 20:32 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பகுதியில் கன மழையால் உடைந்த தரைப்பாலத்தால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கனமழை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 89 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி கிராமத்தில் சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

இதனால் அத்தியாவசிய தேவைக்காக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பாலம் உடைந்தது

இதனை தொடர்ந்து பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா தலைமையிலான அதிகாரிகள் மேக்கிழார்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்தனர்.

மேலும் மேக்கிழார்பட்டியில் இருந்து சில்லாம்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடையில் ஏற்பட்ட வெள்ள நீர் காரணமாக தரைப்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த கனமழையால் உசிலம்பட்டி பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்