லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்டு தேருக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. தேர் ரதவீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நித்யா தலைமையில் கோவில் குருக்கள் தேஜோ விடங்கா, கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.