லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.45½ லட்சம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானமாக ரூ.45½ லட்சம் கிடைத்துள்ளது.

Update: 2022-12-09 17:46 GMT

சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவில், ஊர்கோவிலான லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்களில் வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணி லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் உதவி ஆணையர் ஜெயா தலைமையில் நடந்தது. இதில் 45 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய், 259 கிராம் தங்கம், 456 கிராம் வெள்ளி இருந்தது. அவை அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்