லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நடந்தது.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகளின் ஆசிகளுடன் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நடந்தது.
பஞ்சமி திதி, அஸ்வினி நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாணவ, மாணவிகளின் நினைவாற்றல் அதிகரித்து உரையாடல் மற்றும் அறிவாற்றல் திறன் மேம்படவும், தேர்வுகளில் வெற்றி பெற்று கல்விப்பயணம் தொடரவும் ஏலக்காய் கொண்டு கல்வி மணம் கமழும் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், சரஸ்வதி ஹோமம், வித்யா கணபதி ஹோமம், வித்யா லட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்று பிரசாதங்களை பெற்று சென்றனர்.