ஏரிகளை ஆய்வு செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

ஏரிகளை ஆய்வு செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-09-13 18:20 GMT

திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் கோப்புகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய் துறையின் சார்பில் இ-அடங்கல், இ-பட்டா, இலவச வீட்டுமனை பட்டா, நீர்நிலை புறம்போக்கு, ஆக்கிரமிப்புகள் அகற்றம், மூத்த குடிமகன்கள் பராமரிப்பு, நிலம் மாற்றம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:

வருமானம், பழங்குடியினர் சாதி சான்றிதழ், விதவை சான்றிதழ், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆகிய பணிகளில் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வுக்காண வேண்டும். பேரிடர் மேலாண்மை தொடர்பாக ஏரிகளை ஆய்வு செய்து தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட (நீதியியல்) மேலாளர் உமாரம்யா, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்