ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும்- விவசாயிகள்

அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-08-27 20:28 GMT

அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஏரி, குளங்கள்

தஞ்சை மாவட்டத்தில் கடைமடை பகுதியான அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தற்போது ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை திறந்து விட்டு 2 மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால் அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஏரி, குளங்களில் உள்ள நீரைக் கொண்டுதான் விவசாயம் செய்ய வேண்டி உள்ளது.

தண்ணீர் நிரப்ப நடவடிக்கை

இந்த நிலையில் தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களும் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப் பட்டு வருகிறார்கள்.

உடனடியாக அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்