வளையக்கரணை ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் ஏரி சீரமைப்பு தொடக்கம்

வளையக்கரணை ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் ஏரி சீரமைக்கும் பணிக்கான தொடக்கவிழா நடைபெற்றது.;

Update:2023-03-23 14:32 IST

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள வளையக்கரணை ஊராட்சியை எக்ஸ்னோரா மற்றும் ரெனால்ட் நிசான் தொழிற்சாலை பங்களிப்புடன் உலக தண்ணீர் தினமான நேற்று தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து வளையக்கரணை ஊராட்சியில் முதற்கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பில் நீர்வள சேமிப்பு திட்டமாக நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிக்கான தொடக்கவிழா நடைபெற்றது. விழாவுக்கு வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ரொனால்ட் நிசான், மேலாண் இயக்குனர் கீர்த்தி பிரகாஷ், எக்ஸ்னோரா தலைவர் செந்தூர்பாரி ஆகியோர் கலந்து கொண்டு வளையக்கரணை புது ஏரி தாங்கலில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் ரெனால்ட் நிசான் உயர் அதிகாரிகள் அமிர்தலிங்கம், யுவராணி வளைக்கரணை ஊராட்சி செயலர் திருமூர்ததி பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வளையக்கரணை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் சிற்ப்பாக நடத்தப்பட்டது. இதில் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்