7 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது; ஏரியில் தெப்பம் விட்டு கிராம மக்கள் வழிபாடு
சூளகிரி:
சூளகிரி அருகே பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சி குறள்தொட்டி கிராமத்தில் ஏரி உள்ளது. போதிய மழை பெய்யாததால் இந்த ஏரி கடந்த 7 ஆண்டுகளாக முழுவதுமாக நிரம்பவில்லை. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சூளகிரி பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குறல்தொட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் அங்குள்ள அம்மனுக்கு மா விளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று பூஜை செய்தனர். பின்னர் ஏரியில் தெப்பம் விட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.